மணங்கூடு னேனென வுரைக்க மாயன்
மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம்
அணங்குஇன வழிபோலே யவர்கள் வந்து
ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக்
குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக்
கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால்
பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்பப்
பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே

விளக்கம்
சீதனத்தோடுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று வைகுண்டர் சொன்னதும், சான்றோர் குல வழியில் தோன்றிய சான்றோர்கள் அனைவரும், அந்தக் கன்னியரின் உறவினரைப் போல, அவர்கள் சுவாமியின் முன்னால் வந்து வைகுண்டரின் பாதங்களைத் துதித்துப் போற்றி, அவர் பக்கத்தில் அன்புடன் நின்றார்கள். உடனே, அந்தச் சான்றோர்களின் குணங்களையும், நோக்கத்தையும் வைகுண்டர் அறிந்து அவர்களைப் புகழ்ந்து, சான்றோர்களே, இவர்களை நான் திருமணம் செய்தால் நீங்கள் அதிகமான பொன், காசு, பணங்கள், சீதனமாக கொடுக்க வேண்டும். அப்படி இவர்களுக்காக நீங்கள் என்ன என்ன கொடுப்பீர்கள் என்னு என் முன்னிலையில் கூறுங்கள் என்றார்.
அகிலம்
சான்றோர்
==========
பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும்
பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர்
உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும்
==========
பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும்
பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர்
உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும்
விளக்கம்:
அய்யாவே, தாங்கள் எங்களிடம், சீதனங்கள் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னீர். அப்படியானால் நீர் அப்பெண்களுக்குப் பரிசமாக என்ன கொடுப்பீர் என்று சொல்லுவீராக என்று சான்றோர்கள் எல்லாரும் கேட்டார்கள்.
அகிலம்:
வைகுண்டர்:
============
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு
சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார்
============
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு
சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார்
விளக்கம்
சான்றோர்களே, நான் தரும் பரிசும் உடைந்து அழியாததும், சதகோடி எண்ணாலும் எண்ண முடியாததும் ஆகிய தங்கக்காசு (தருமபதி) ஆகும். இனி நீங்கள் அதற்கு நிகராகத் தரும் சீதனமாக சொத்துக்களை எல்லாம் நான் அறிய உண்மையாக உரைக்க வேண்டும் என்றார்.
அகிலம்
ஆண்டவரே யிப்பரிசந் தருவீ ரானால்
யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு
குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம்
மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள்
விலையடிமை யானோங்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே
பாவையரு மக்களுமும் பக்கந் தானே
யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு
குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம்
மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள்
விலையடிமை யானோங்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே
பாவையரு மக்களுமும் பக்கந் தானே
விளக்கம
சான்றோர்:
எங்கள் ஆண்டவரே, நீரே இந்த விலை மதிப்பற்ற பரிசம் தருவீரானால் உமது அடியாராகிய எங்களோடு, நாங்கள் ஆண்டு வரும் சொத்துக்கள், பொருள்கள், நாங்கள் வைத்திருக்கும் பொன், ஆடு, மாடுகள், ஆகியவை எல்லாம் குரு பரனாகிய உமக்கே சொந்தமாக்குகின்றோம். மேலும், நாங்கள் முழுமையாக உமக்கு விலை பெற்ற அடிமைகளாக ஆகின்றோம். அறிந்து கொள்வீராக, வைகுண்டரே, முன்பு பாண்டவரைக் காத்து ஆண்டது போல் இந்தக் கன்னிகளையும் எங்களையும் உம் பக்கத்தில் வைத்து ஆட்சி புரிவீராக.

பக்கமது என்றவுடன் மாயன் தானும்
பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம்
ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும்
தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை
தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே
பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம்
ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும்
தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை
தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே
விளக்கம்
உமது பக்கம் வைத்து ஆட்சி புரீவீர் என்று கூறியவுடன் வைகுண்டர் சான்றோர்களே, நீங்கள் சிறிதளவும் பதற்றம் அடையாமல் இருங்கள். உங்களையும் காத்துப் பேறு கொடுப்போம். அது மட்டுமல்லாமல் என் குலச் சான்றோர் மக்கள் எல்லாரையம் ஒற்றுமையாக இருத்தி இந்தத் தரும பூமியை ஆண்டு வருவோம். இதை நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. எனவே, நீங்கள் இந்த வாக்குறுதியைக் கூறி உங்கள் சொத்துக்களை எனக்குக் கொடுத்ததும், என்னிடம் பரிசும் வாங்கியதும் எந்தவிதத் தவறும் இல்லை. இனி, உயர்வான இந்தக் கன்னிகளை நான திருமணம் செய்யப் போகிறேன். அதற்காக மென்மையான கன்னிகளின் கைகளை நீங்கள் பிடித்து தாருங்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக