ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில் என்று தொடர்ந்து அய்யாவின் திவ்ய திருப்பாதங்களை வணங்கி இந்த தொடர்கதையை எழுத ஆரம்பிக்கிறேன்,
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில் என்று தொடர்ந்து அய்யாவின் திவ்ய திருப்பாதங்களை வணங்கி இந்த தொடர்கதையை எழுத ஆரம்பிக்கிறேன்,
நாட்டுக்குடைய நாராயணர் இந்த நாட்டிலே வந்து யுகாயுகங்கள் ஆகிய ஏழு யுக வழக்குகளையும், வரம்புகளையும், வளங்களையும் தொகுத்து நமக்கு தருகிறார், அதற்கு அகிலத்திரட்டு அம்மானை என்று திருநாமிட்டு அதிலே சொல்லப்பட்டக் கருத்துகளை அந்த நூலின் பெயரிலே நமக்கு வெளிப்படுத்துகிறார், உலகத்தில் உள்ள மனித தர்மத்தை மட்டும் அல்லாமல் தெய்வ ரகசியங்களையும் எடுத்து கூறுகின்ற ஆகமம் அகிலத்திரட்டு அம்மானை. அந்த நூலினுடைய இன்னொரு மகத்துவம் மூன்று காலங்களையும் பற்றி அது தெளிவாக எடுத்து சொல்கிறது, கடந்தகாலம், நிகழ்காலம், இனி வருகின்றகாலம்.
தீர்க்க தரிசனங்கள் பலதந்து நம்மை நல்லதொரு வாழ்க்கைக்கு எதிர்நோக்க வைக்கின்றது, அகிலத்திரட்டு அம்மானையானது ஜாதி, மத பேதங்களைக் கடந்து நின்று மனித தர்மத்தை போதிக்கின்றது , எந்த சமயத்தவராக இருந்தாலும், ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற நோக்கத்திலே ஒருவன் அதை அறிந்துகொள்ள முற்படுவான் என்றால் அய்யாவினுடைய கருணையினால் முழு பலனையும் பெறுவான், அப்படி உண்மையை உரைக்கவந்த எம்பெருமான் 1008-ஆம் ஆண்டு திருச்செந்தூர் திருப்பாற்கடல் உள்ளே மகரச் சிலையாக வளர்ந்து நின்ற அன்னை மகாலக்ஷ்மியின் மணிவயிற்றிலே, நாட்டுக்குடைய நாராயணருக்கு ஒரு பிள்ளையாகப் பிறக்கின்றார்,
எப்படி தசரத மன்னன் பன்னிரண்டா யிரம் ஆண்டுகள் தவமிருந்து ஸ்ரீ நாராயண பெருமானின் அம்சத்தில் ஸ்ரீராம பகவானை அடைந்தாரோ, அதுபோல இந்த கலியுகத் தீர்வுக்காக வேண்டி கர்த்தாதி கர்த்தன், உற்ற வைகுண்ட சுவாமி ஒருகுடைக்குள் இந்த உலகை அரசாள ஆயிரத்து எட்டிலே பிறந்தார், கடலுக்குள்ளாக பிறந்த வைகுண்டராஜர் மூன்று நாட்கள் அந்த கடலுக்குள்ளாகவே இருந்து அரும்பெரும் உண்மைகளை, சத்தியத்தை அருள் விஞ்சையாக பெறுகின்றார். விஞ்சை பெற்ற வைகுண்டராஜர் கரையிலே வந்து தாம் தவமிருக்கவேண்டும் என்று பெற்றுவந்த விஞ்சையின் பிரகாரம் அந்த இடத்தை தேர்ந்தெடுக்கின்றார்.
ஞானி ஒருவன் கர்மபலனிலே கருத்து வைத்து வாழுகின்ற வேளையிலே அவனுக்கு ஞானத்தை போதித்து அவனை குழப்பிவிடக் கூடாது, போதிக்கின்ற ஞானி அதை முதலில் செயல்படுத்தி, அந்த செயலை மக்களுக்கு வெளிப்படுத்தி அப்படி புரிய வைக்கவேண்டும் என்பது வேதவாக்கு, அதுபோல தாம் ஏற்றுவந்த அருள்விஞ்சை யினை மக்களுக்கு முதலில் வாயினால் சொல்லக்கூடாது, நாம் அதனை நடத்தி காட்டவேண்டும், அதை மக்கள் பார்த்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று அய்யா ஞானத்தவம் இருக்கிறார்,
அவர் ஏற்றுவந்த ஆறுவருட தவத்திலே முறைப்படியாக இரண்டு இரண்டு வருடங்கள் என்று மூன்று தவங்களாக அதை நடத்துகிறார், அப்படி நடத்துகின்ற தவநெறியிலே மக்களுக்கு எம்பெருமான் மகத்துவங்களைக் கூறுகின்றார். அவரை நாடிவந்த மக்களுக்கு அன்பாக மண்ணும்,தண்ணீரும் மருந்தாக கொடுக்கின்றார். அதை பக்தியுடனும், மன உறுதியுடனும் பெற்றுக்கொண்ட மக்களுக்கு சகலவிதமான நோய், பிணிகளும் தீர்ந்துவிடுகின்றது.
மக்களினுடைய குறைகளைத் தீர்க்கவந்த எம்பெருமான் அந்த பணியோடு அல்லாது ஒவ்வொருவருடைய ஏழுயுகக் கணக்குகளையும் கேட்டு நடுத்தீர்ப்பு செய்கிறார், அப்படி நடுத்தீர்வை செய்துகொண்டு இருக்கும் போது நாட்டில் ஜாதி,மத பேதமின்றி பதினெட்டு ஜாதி மக்களும் வந்து அய்யாவை வணங்கி அருள்பெற்று சென்றார்கள், அப்போது ஜாதி வெறிபிடித்த ஒருசிலர் இந்தக் குலத்திலே எப்படியடா கடவுள் வருவார்? அவர் வருவதற்கு மற்ற உயர்ந்த குலங்கள் இல்லையா? இது ஏதோ பம்மாத்தாக இருக்கிறது என்று சொல்லி அய்யாவை பிடித்து, அய்யாவை இறைவன் என்று அறியாத பாவிகள் அவரை சிறையில் வைத்து கொடுமைகள் படுத்தினார்கள், ஆனால் எம்பெருமானோ மக்களுக்காக மிக பொறுமையுடன் அந்த தண்டனையை அனுபவிக்கிறார்,மிகவும் அன்போடு இருந்தார், வம்பை அழித்து வைகுண்டம் தானாகி சொல் ஒன்றால் தர்மபுவியை ஆளுகின்றார்,
இப்படியாக அவர் வந்து நடத்திய அற்புதங்கள் எல்லாம், இனி நடத்த இருக்கின்ற காரண காரியங்கள் எல்லாம் இந்த ஆகமத்திலே எடுத்து சொல்லப்படுகிறது , ஏகம் ஒரு பரமான நிலையிலே இருந்து வைகுண்டர் ஒரு சொல்லுக்குள்ளாக தர்மயுகத்தை ஆளுகின்ற காலம் வரையிலும் உள்ள வரலாற்றினை முன்னாள் சொன்ன அருள் ஆகமம் போலவே இங்கு எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது, அப்படி யுகா-யுகங்கள் தோறும் யுகதர்மத்தை நிலை நிறுத்த வருகின்ற நாராயணர் வந்து நடத்தும் அற்புதங்களை எல்லாம் காரணமாய் எழுதி கதையாய்ப் படித்து உணர்ந்தவர்களுக்கு, உணர்ந்து வாழ்ந்தவர்களுக்கு மிக கொடிய நோய்களும் தீரும் என்று அய்யாவும் இந்த அகிலத்திரட்டு அம்மானை எனும் ஆகமத்தை எடுத்து அருளுகிறார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக