ஏழுயுக கணக்கை நடுத்தீர்க்க வந்த எம்பெருமான் அவருடைய திருக்கதையை வரலாறாக இங்கு அமைத்து தருகிறார், கடந்த துவாபர யுகம் முடிந்த பிறகு யுகதர்மத்திற்காக எடுத்திருந்த பொன்மேனி சடலத்தை பர்வதா மலை உச்சியின் மேல் கழற்றி வைத்துவிட்டு, ஒரு பண்டார ரூபமாக வழிநடந்து அயோத அமிர்தகங்கை கரையிலே சான்றவர்களை பெற்று நாட்டிலே வாழவைத்துவிட்டு எம்பெருமான் ஸ்ரீரங்கத்திலே போய் பள்ளிக்கொள்கிறார்.
மக்களெல்லாம் தர்மத்தால் அரசாள படுகின்ற வேளையிலே இந்த நாட்டுக்கு கேடாக கலிபிறந்து வருகிறது, கலி பிறந்து வந்த காரணத்தினால் ஒற்றுமையாக வாழ்ந்திருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து பிரிவு முறிவாகி வேதனை படுகிறார்கள், மக்களினுடைய துயரத்தை தீர்பதர்க்காக வேண்டி சான்றோர் வழியிலே மனுவாக பிறக்கின்றார். இருபத்திநான்கு வருடங்கள் மனுதர்மத்திலே வாழ்ந்திருந்து இருபத்திநான்கு வருடத்திற்கு பின்னாலே திருசெந்தூர் கடலுக்குள்ளாக சென்று மூன்று நாட்கள் அங்கு மறைந்திருந்து தர்ம உபதேசங்களை பெறுகின்றார்.
பெற்றிருந்த உபதேசங்களை வழிநடத்த சுவாமிதோப்பு எனும் திருநகரிலே வந்து அய்யாவினுடைய திருத்தலமாக விளங்கிக்கொண்டு இருக்கின்ற அந்த பதியிலே வடக்குவாசல் எனும் தலத்தில், அன்று அந்த பகுதி காடாக இருந்தது, அதிலே ஒரு பெரிய மாமரத்தின் அடியிலே ஏற்றுவந்த ஆறு வருட அருமையான தவங்களை நடத்தி வெற்றி பெறுகின்றார், வாழுகின்ற மக்களுக்கு இந்த உலக வாழ்வை வாழ்ந்து மேலான தர்ம வாழ்வு ஒன்று இருக்கிறது என்றும், இந்த கலியுகமானது அழிகின்ற காலத்திலே இந்த நாட்டிலே பெரும் குழப்பங்களும், சேதங்களும் ஏற்படும் என்ற விவரத்தை
"வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்" அப்படி பெரிய அழிவு ஏற்பட்டு தர்மயுகம் தோன்றுகிறது என்றும், இப்படி முழுவதும் இந்த அகிலத்திரட்டு அம்மானையில் அடக்கி சொல்கிறார்.
"வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்" அப்படி பெரிய அழிவு ஏற்பட்டு தர்மயுகம் தோன்றுகிறது என்றும், இப்படி முழுவதும் இந்த அகிலத்திரட்டு அம்மானையில் அடக்கி சொல்கிறார்.
அந்த உரையினை கேட்டு எழுதிய அந்த அரிகோபால சீசர் சொல்கிறார் இது நான் எழுதவில்லை, இது என்னால் எழுத முடியாது. அப்படி நான் எழுதினேன் என்று சொன்னால் யானை நடப்பதை பார்த்து அன்றில் பறவை நடப்பதற்கு சமம், இனிமையான குரலிலே பாடுகின்ற குயிலின் ஓசையை கேட்டு நானும் அதுபோல குரலில் பாடுவேன் என்று சொன்ன ஆந்தைக்கு சமம், மயில் ஆடுவதை பார்த்திருந்த வான்கோழி நானும் அதுபோல ஆடுவேன் என்று சிறகை விரித்து ஆடினால் மயிலுக்கு ஈடாக முடியுமா? எனவே நான் அல்ல இதை எழுதுவது, நான் அல்ல இதை சொல்லுவது, எல்லாம் அந்த நாராயணரே...
ஒருவர் ஒரு கட்டுரை எழுதினால் இதை இன்னார் எழுதினார் என்று சொல்கின்றோம், ஆனால் அந்த கட்டுரை எழுதுவதற்கு பேனாவும் ஒரு முக்கிய பொருள், அந்த பேனா சொல்கிறது நான்தான் இதை எழுதினேன் என்று, அது உண்மையா? அதுபோல நான் இதை எழுதவில்லை, நான் பேனாவை போல ஒரு கருவி, அந்த கதையாசிரியர் போல கடவுள். எம்பெருமான் வைகுண்ட சுவாமி கர்த்தா, நான் ஒரு கருவி என்று தன்னுடைய பெருமையை, அவருடைய அறிவை, அவருடைய திறமையை அந்த எம்பெருமான் திவ்ய திருப்பாதங்களுக்கு சமர்ப்பணம் செய்து இந்த ஆகமத்தை நமக்கு எடுத்து சொல்லி வருகின்றார்.
வரலாற்றை துவங்குவதற்கு முன்னால் இந்த வரலாறு நல்லபடியாக அமையவேண்டும் என்று தெய்வ வணக்கம் செய்கின்றார். தெய்வ வணக்கம் செய்து தர்மபுவியாக்கி மாற்றி தாரணியை ஆள்வதற்காக இந்த கர்மக்கலியிலே வைகுண்ட சுவாமி வந்த கதையை சாகாதிருக்கும் தர்ம அன்பு உள்ளோர்முன் அகிலத்திரட்டு அம்மானை எனும் ஆகமத்தை வகுத்து அருளுகின்றார். அவருக்கு இந்த பாக்கியம் கிடைத்தது எப்படி? அந்த வரலாற்றையும் தொடர்ந்து நமக்கு சொல்லி வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக