சாட்டு நீட்டோலை:
=================
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
விளக்கம்:
=========
அத்தனை இரகசியங்களையும் எனக்குள்ளே வைத்துக் கொண்டு பிறருக்குப் புரியாவண்ணம் திருச்செந்தூரை அடுத்த பெரிய ஊருக்கு வந்து சேர்ந்தேன் சிவனே அய்யா.

==================
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
விளக்கம்
==========
அங்கே என்னைப் பார்த்து “பேய் போன்றவன் அதோ போவதைப் பாருங்கள்” என்று சில நீசர்கள் தூற்றினர் சிவனே அய்யா.

சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
விளக்கம்
==========
சில நீச குழந்தைகள் கூடி நின்று என்னை வசை பாடினார்கள். அவர்களை அடக்கித் திருத்த ஐந்து சீவாய்களில் ஒருவனான சிமிழராசனை அனுப்பி வைத்தேன் சிவனே அய்யா.

கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
விளக்கம்
==========
அங்கே பிராமணர்கள் வாழும் தெருவில் சில நீசர்கள் கல்லால் என்னை எறிந்தனர். அந்தக் கற்கள் என்மேல் படாமல் தடுக்கக் கருடனை ஏவி விட்டேன் சிவனே அய்யா.

அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
விளக்கம்
==========
பிறரைக் குறை கூறும் அந்த நீசர்களைக் கடந்து தாண்டி வரும் போது அவர்கள் சொன்ன வார்த்தைகளை என்னால் சொல்ல முடியவில்லை அவ்வளவு கீழ்தரமாக இருந்தன சிவனே அய்யா.

காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
=================
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
விளக்கம்
==========
என் காலில் அதிகமாகத் தூசி இருந்தது என்பதால் நான் காலை கழுவினேன் சிவனே அய்யா.
==========
என் காலில் அதிகமாகத் தூசி இருந்தது என்பதால் நான் காலை கழுவினேன் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
=================
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
விளக்கம்
==========
அதைக் கண்ட ஒரு நீசன் காலின் தூசியைக் கழுவுகிறாயே, காலை வளைத்து உன் தோள்மேல் போடு என்று சொன்னான் சிவனே அய்யா.

இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
விளக்கம்
==========
இப்படியே நீசர்களின் பல வசைச் சொற்களை நான் கேட்டுக் கொண்டே இங்கே வந்தேன் சிவனே அய்யா

சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
விளக்கம்
==========
அப்படி நான் வரும்பொழுது ஒரு பனையேறி தனக்குரிய பனையில் பனையேறிப் பதநீர் இறக்கியதைக் கண்டு எனக்கு வயிறு பசிக்கின்றது பதநீர் தா என்றேன் சிவனே அய்யா.

பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா
விளக்கம்
==========
அதற்கு அவனோ, பதநீரில் அளவுக்கு அதிகமான சுண்ணாம்பைப் போட்டுவிட்டு என்னை குடியும் என்றான். அதை குடித்த எனக்கு அந்தப் பதநீர் பாலாகவே இருந்தது சிவனே அய்யா.

மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
விளக்கம்
==========
அந்த அதிசயத்தைப் பார்த்து அவன் மனம் மாறி இந்த மாய தன்மை எப்படி வந்தது? என்று என்னைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டான். இவ்வாறு மனம் மாறிய அவனை அன்போடு பார்த்து தாலிச் சரடாகிய சுவாசத்தை நிறுத்தி உன் கட்டுப்பாட்டுக்குள் கட்டிவை இம்மாயைசக்தி வரும் என்று வழிமுறைகளை கூறினேன் சிவனே அய்யா.

நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
விளக்கம்
==========
நன்மை பொருந்திய முனியாகிய நான் இங்கு இருந்து கொண்டே மக்கள் அறியும்படி செய்த விளையாட்டுகளைக் கூறினேன் சிவனே அய்யா.

அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
விளக்கம்
==========
பிறரைக் காப்பதற்காகவே பூவண்டன் தோப்பில் அமர்ந்து இருந்தேன் சிவனே அய்யா.
=================
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
விளக்கம்
==========
பிறரைக் காப்பதற்காகவே பூவண்டன் தோப்பில் அமர்ந்து இருந்தேன் சிவனே அய்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக