வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா துணை.

உகப்படிப்பு :
===========
உத்தாரமும் துகிலும் உகந்து எனைநகைத்த
சந்திராதியைக்குத்தி தர்மபதி அரசாள
வெற்றிக்கொடியும் கட்டி வீரப்பதியிலேறி
மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா’
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
துவயல் தவசில் எங்கள் உயர்வையும், மகிழ்வுடன் நாங்கள் கொண்ட அறதுயிலையும் நோக்கி, ஏளனமாகச் சிரித்த எதிரியாகிய கலியனைக் கொன்று வெற்றிக் கொடியும் கட்டி, வைகுண்டம் சென்று அங்கு உபதேசமும் விடையும் பெற்று மீண்டும் தருமபதியில் (தாமரைக்குளம் பதியில்) ஆட்சி புரிய இங்கே வருவது எங்கள் அய்யாவே. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
===========
நாட்டை நொடித்த கலீனீசன் முடியை
இறக்கி நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
இவ்வுலகத்தை தம் கொடுமையினால் வீழ்ச்சியுறச் செய்த கலியனை ஆட்சியிலிருந்து இறக்கித் தரும பதியை ஆட்சி புரிகின்றவர் நாராயணராகிய எங்கள் அய்யாவே, பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
கல்லைப்பிளந்த கணபதி நாராயணம்
செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
இரணியனைச் சங்காரம் செய்யத் தூண் கல்லைப் பிறந்து நரசிம்ம அவதாரம் மூலம் தோன்றி இரணியன் உயிரைக் குடித்த உயர்வான வைகுண்டபதியில் இருக்கும் நாராயணராகிய வைகுண்டர் தம்முள்ளே ஓடுகின்ற நடுநாடியாகிய நடு வீதியைத் திறந்து தருமபதியை ஆண்டு பெருமை மிக்கத் திருமுடியைச் சூடி ஆட்சி புரிய வருபவர் எங்கள் அய்யாவே, பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
அக்கனியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
அக்கினி சக்தியால் தீயவற்றை அழித்து விடுவேன் என்பதைப் பொய்யென்று எண்ணாதே, அது உண்மை தான். அவ்வக்கினி சக்தியாகிய குண்டலினி சக்தி வந்ததும் ஐந்து ஆறு நாள்களுக்குள் கலித்தன்மையும் ஏனைய தீய தன்மையும் அழிக்கப்பட்டு ஆட்சி புரிவதும் உண்மைதான். அந்த வெற்றியையுடைய ஆபரண மாலையை அணிவது எங்கள் அய்யாவே, பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
ஆடிக்கள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே
தெரிந்தவர் தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா
திரைகடல் ஓடுமுன்னே அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
உள்ளமாகிய கண்ணாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்கள் அய்யாவை எட்டு நாழிகைக்குள் அறிந்து கொள்ள முடியும், எனவே, இங்கிருந்து அய்யா வெளியே சென்று மறைவதற்குள் அயராது உழைத்து அவரை அறிய முடிந்தவர்கள் அறிந்து கொள்ளுங்கள். எங்கள் அய்யாவைப் பற்றிய சிந்தனை உங்கள் உள்ளத்தை விட்டு வெளியே செல்லும் முன்னர் அவரைத் தெரிய முடிந்தவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக