வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வைகுண்டர்.

சாட்டு நீட்டோலை:
=================
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
விளக்கம்:
--------------
ஐம்புலன்களையும் அடக்கிச் சடத்தன்மை பெற்றோர்கள் தமது சூட்சும உடம்போடு கயிலாயத்தில் வாழ்ந்திருக்கிறார்களே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
=================
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
விளக்கம்:
--------------
வீடு பேறாகிய வைகுண்ட பதவி அடைந்த விண்ணோர்கள் மனம் மகிழும்படியாக சிவனே அய்யா
சாட்டு நீட்டோலை:
=================
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
விளக்கம்:
--------------
நச்சுப் பொய்கை ஆகிய இந்த கலியில் நன்றாக ஆட்சிப் புரிய என்னை அனுப்பி வைத்தீரே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
=================
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
விளக்கம்:
--------------
இவ்வாறாக் கலியர்களின் சூதை முடித்துக் கூத்தாடியதையும், அவர்களது சாவையும் படிப்படியாகச் சொல்லி முடித்தேன்.
சாட்டு நீட்டோலை:
=================
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்
விளக்கம்:
=========
வாடிய கன்னிமக்கள் ஏழுபேருக்கும் அவர்களுடைய சந்ததியார்க்கும் கொடுக்கப்பட்ட கொடிய சாபம் இனி மேல் நீங்கி விடும். காசி போன்ற கோவில்களின் காணிக்கைக் குடங்களில் காணிக்கை இடுபவர்களையும், கல்லறைகளுக்குப் பொன்னாலாகிய பணத்தைக் காணிக்கையாக இடுபவர்களையும் நான் குத்திப் பிடித்துக் குரங்கு போல் ஆட்டித் துன்புறுத்தி விளையாடுவேன்.
சாட்டு நீட்டோலை:
=================
ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்.
விளக்கம்:
--------------
நான் ஒருவனாய் இருந்து கொண்டு சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும், பார்வதி, சரசுவதி, இலட்சுமி, பகவதி ஆகிய நான்கு பேரையும் கன்னிமார் ஏழு பேரையும் ஆடும்படி செய்திடுவேன்.
சாட்டு நீட்டோலை:
=================
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
விளக்கம்:
--------------
உலகை இரண்டு அடியாய் அளந்த மாயனது வலிமையை உலக மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.
சாட்டு நீட்டோலை:
=================
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
விளக்கம்:
--------------
கலியனின் கடைசி எல்லைக் காலத்தில், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று பேரையும், கன்னிமார் ஏழு பேரையும் ஆட்டி வைத்த விளக்கங்களை நாலு திசைகளிலும் உள்ள மக்கள் விபரமாக அறிந்தவுடன் இது வரை என்னை நகைத்துப் பித்தலாட்டம் செய்து வந்தவர்கள் எல்லாரும் பெருமை குலைந்து போவார்கள்.
சாட்டு நீட்டோலை:
=================
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
விளக்கம்:
--------------
கடவுள் என்று நபியைத் தேடி அலைந்தவர்கள் சீக்கிரத்தில் மூன்று நாள்கள் அனுபவிக்கும் துன்பத்திலும் அதன் முன்னாலும் பின்னாலும் அழிக்கப்படுவார்கள்.
சாட்டு நீட்டோலை:
=================
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.
விளக்கம்:
=========
தீமை தங்களுக்குள் புகாமல் காத்து வந்த மக்கள் எல்லாரும் கயிலையங்கியைக் காணுவீர்கள். பிறகு வீரவாகுவின் முடியினை வெற்றி முடியாகச் சூடிக் கயிலையங்கிரியை ஆண்டிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக