சாட்டு நீட்டோலை:
==================
==================
மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
மௌனத்திருந்திட்டேன் சிவனே அய்யா
விளக்கம்:
மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நாலும் எழுகின்ற நிலை அடக்கி இறுதியில் மௌன நிலையாகி மௌனத்தில் அடங்கி விட்டேனே சிவனே அய்யா.
மனம் :
======
======
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
நாம் ஏதேனும் ஒரு செயலிலோ, சிந்தனையிலோ ஆழ்ந்திருக்கும் போது, நம் புலன்கள் உள்வாங்கும் விஷயங்களை கவனிக்காமல் தவறவிடுகின்றோம். நம் 'மனம்' ஆதாரமாக இருந்து புலன்களின் வழி வரும் உள்ளீடுகளை கவனிக்காவிடில், அவை பதிவாவதை நாம் கவனிப்பதே இல்லை.
ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டிருக்கும் போது, மனம், கேட்கும் சப்தத்தை தவற விடுகின்றது; காணும் காட்சிகளை, வீசும் நறுமணத்தை, உடலில் படும் ஸ்பரிசத்தை என எதையும் பதிவு செய்யத் தவறுகின்றோம். மனதை துக்கமோ, சுகமோ பாதித்திருக்கும் போது, உண்ணும் உணவின் ருசியும் கூடத் தெரிவதில்லை. மனதின் உதவியுடனேயே, நம்மால், புலன்கள் வழி உள்வாங்கப்படும் விஷயங்களை, கிரஹித்து, உணர முடிகின்றது.
சித்தம் :
=======
=======
புத்தியின் துணை கொண்டு மனம் அறியும் பதில்களையும் பதிவு செய்து கொள்கின்றது. விஷயங்களையும், சலனங்களையும், விளக்கங்களையும், இவை சார்ந்த எண்ணங்களையும், எண்ணங்களின் விளைவுகளையும் என எல்லாவற்றையும் பதிவு செய்து கொள்கின்றது. பதிவு செய்து கொள்வதும், மனமோ, புத்தியோ அந்தப்பதிவுகளை மீட்டெடுத்துக் கொள்ள வசதியான தளமாக விளங்குவதும் மட்டுமே சித்தத்தின் தன்முனைப்பற்ற காரியங்கள்.
இது தன் செயல்பாட்டில் ஒரு பௌதீகக் கருவியைப் போலவே செயல்பட்டாலும், அறிவியல் ஆய்வின்படி, இது ஸ்தூலமான மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆதாரமாகக் கொண்டிருந்தாலும், பதிவு செய்து கொள்வது, தளமாக விளங்குவது ஆகியப் பண்புகள் வெறும் எண்ணங்களாக, ஸ்தூலமாக இன்றி, நுண்ணிய வடிவில், சூக்ஷமமாகவே விளங்குகின்றன. நினைவு சார்ந்த இந்த எண்ணத்தொகுப்புகளே சித்தம்.
புத்தி :
======
======
நம் இந்த்ரியங்கள், விஷயங்களை, அவை இன்னவைதான் என்ற தீர்மானமான நிர்ணயம் இல்லாமலே உள்வாங்குகின்றன. அவை நமக்கு ப்ரியமானவையா, ப்ரியமற்றவையா என்ற பேதமும் இல்லாமலே உள்வாங்குகின்றன. அவை இன்னதென்று அறியும் திறன் புத்தி என்று அழைக்கப்படுகின்றது.
அகங்காரம் :
===========
அகம் = நான், காரம் = உச்சரிப்பு => நான் என்ற உச்சரிப்பு.
===========
அகம் = நான், காரம் = உச்சரிப்பு => நான் என்ற உச்சரிப்பு.
தான் என்ற எண்ணம் செருக்கு,கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். முனைப்பு, யானெனல். அகங்காரம் எப்போதும் தன முனைப்புடையது.தீவிர போட்டி மனப்பான்மையுடையது.
சாட்டு நீட்டோலை:
==================
==================
அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா
விளக்கம்:
=========
அப்பு, பிருதிவி, தேயு, வாயு, ஆகாயம், ஆகிய ஐந்து பூதங்களும், நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரமாச்சுதே சிவனே அய்யா.
=========
அப்பு, பிருதிவி, தேயு, வாயு, ஆகாயம், ஆகிய ஐந்து பூதங்களும், நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரமாச்சுதே சிவனே அய்யா.
பஞ்சபூதங்கள்:
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன.
மண் = பிருத்தி
நீர் = அப்பு
தீ = தேயு
வளி = வாயு
வான் = ஆகாயம்
இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.
1. மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)
2. நீர் (அப்புத்தலம்) -திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், திருச்சிராப்பள்ளி
3. தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
4. வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
5. வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்:
===================================
===================================
மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு
இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல்
படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக